பேராசை பெரும் நஷ்டம்

பேராசை பெரும் நஷ்டம் 


அழகிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் சந்தையில் ஒரு வியாபாரி கவலையாக அமர்ந்திருந்தான். அவன் பெயர் சிவா.சிவா சந்தையில் ஆட்களும் அதிகமாக வருவதும் கிடையாது அப்படி ஆட்கள் வந்தாலும் நம் விற்கும் பொருட்களை யாரும் வாங்குவது கிடையாது என்று மிகவும் கவலையாக அமர்ந்திருந்தான். கடையில் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

இவர் கவலையாக இருப்பதை கண்ட பக்கத்து வியாபாரி பக்கத்து ஊரில் கொண்டு போய் உன் பொருட்களை விற்க பாரு, அங்கு நன்றாக விற்பனையாகிறது என்று கூறினார். சிவாவும் தன் பொருட்களை கட்டிக்கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றபோது வழியில் வெயில் அதிகமாக உள்ளதால் அவருக்கு அதிக அளவில் எரிச்சல் உண்டானது. எரிச்சல் உண்டாக காரணம் அவர்களின் மீதுள்ள இடைத்தட்டு தான் காரணம்.

இதை இப்படியே எடுத்துச் செல்ல முடியாது என்று எண்ணி தன் நண்பனிடம் கொடுத்து விடலாம் என்று எண்ணினார். இது என் தாத்தா இடைத்தட்டு வேற, அவர் ஞாபகமாக இது மட்டும்தான் உள்ளது. முத்து வீட்டிற்கு சென்று நண்பா இது என் தாத்தா ஞாபகமாக வைத்துள்ளேன். இதை நன்றாக பத்திரமாக பார்த்துக்கொள். நான் பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக செல்கிறேன். ஆகையால் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள். மீண்டும் வந்து வாங்கி கொள்கிறேன் என்று கூறினார்.

சரி நண்பா பார்த்து பத்திரமாக சென்று வா என்று முத்து கூறினார். சிவாவும் பக்கத்து கிராமத்திற்கு சென்றார். முத்துவிற்கு அந்த இடைத்தட்டு நன்றாக உள்ளது. இதை நாமே வைத்துக்கொள்ளலாம் என்று பேராசை கொண்டார். சிவா திரும்பி வந்து  அவரின் எடை கேட்டபொழுது முத்து இல்லை அதை எலி ஒன்று கடித்து விட்டது என்று கூறி சமாளித்தார். இதைக் கேட்டவுடன் அவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அப்போதே ஒரு யோசனை வந்தது. உன் பிள்ளையை என்னுடன் அழைத்து போகிறேன்.

உங்களுக்காக பரிசு வாங்கி வைத்துள்ளேன் என்று முத்துவின் பிள்ளையை அழைத்து தன் வீட்டிற்கு சென்றார். பல மணி நேரம் ஆகியும் முத்துவின் பிள்ளை வரவில்லை என்று கவலையாக இருந்தார். நேராக சிவாவிடம்  என் பிள்ளை எங்கே என்று கேட்ட போது, உன் பிள்ளை வரும் வழியில் பருந்து ஒன்று தூக்கிக் கொண்டு சென்று விட்டது என்று கூறினார். இவர்களுக்கு இடையே அதிக அளவில் வாக்குவாதம் ஏற்பட்டு கிராம பஞ்சாயத்து போனார்கள்.

இவர்கள் இருவரும் மாறி மாறி கூறுவதை கேட்டு என்ன நகைச்சுவையாக உள்ளது என்று பஞ்சாயத்தில் கூறி உண்மையாக எங்கே என்று கேட்ட பொழுது சிவா என் இடைத்தட்டு வந்தால் தான் அவரின் பிள்ளை எங்கே என்று நான் கூறுவேன் பின்பு தானாகவே வீட்டுக்கு வந்து சேரும் என்று கூறினார். அது போலவே தன் பிள்ளையை காப்பாற்றிக் கொள்வதற்காக முத்து சிவா இடம் எடை தட்டிக் கொடுத்தார். முத்துவின் பிள்ளையையும் நன்றாக வீட்டிற்கு வந்து விட்டான்.  பேராசை பெரும் நஷ்டம்

Post a Comment

0 Comments