புலியும் மரங்கொத்தியும்

புலியும் மரங்கொத்தியும் 


tiger and woodpecker  ஒரு அடர்ந்த காட்டில் புலி ஒன்று வேட்டையாடி உணவு உண்டு கொண்டிருந்தது. அப்போது உண்ணும் போது அதன் வாயில் ஒரு எலும்பு துண்டு சிக்கிக்கொண்டது. புலி எவ்வளவு முயற்சி செய்தும் அதன் வாயில் உள்ள எலும்புத்துண்டை வெளியே எடுக்க முடியவில்லை. நாட்கள் கடந்தன. 

புலியானது உணவை உண்ணாமல் அதன் உடல் மெலிந்து போனது. இப்படி நாளுக்கு நாளாக உணவை உண்ணாமல் நான் இருந்தால் இருந்து விடுவேன் என்று எண்ணி பயந்தது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தது. ஆனால் புலிக்கு கடைசிவரையிலும் நல்ல யோசனையே வரவில்லை. 

அப்போது மரத்தில் அமர்ந்து இருந்த மரங்கொத்தி ஒன்று புலி முதலிலிருந்து செய்யும் செயல்கள் எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது.மரங்கொத்தி புலியிடம் என்னாச்சு உனக்கு ஏன் எப்போதும் வாயைத் திறந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது. அப்போது புலி சைகை மூலம் மரங்கொத்தியே அருகில் வர வைத்தது. வாயில் உள்ள எலும்புத்துண்டை காட்டியது.சரி நான் உனக்கு உதவி செய்தால் நீ வேட்டையாடுவதில் ஒரு பங்கு உணவு தரவேண்டும் என்று மரங்கொத்தி புலியிடம் கூறியது. 

புலியும் வேற வழி இல்லாமல் மரங்கொத்தி கூறியதற்கு ஒப்புக்கொண்டது. மரங்கொத்தி கூறியதற்கு சைகை மூலம் ஆமாம் என்று தலையை ஆட்டியது. மரங்கொத்தி புலியின் வாயில் உள்ள இரும்பு துண்டை எடுத்துக்கொண்டு மரத்தின் மேல் அமர்ந்து கீழே போட்டது. நான்கு நாட்கள் கழித்து புலி ஒரு மானை வேட்டை ஆடியது. அப்போது புலி அமர்ந்திருந்த மரத்தின் மீது மரங்கொத்தி வந்து அமர்ந்து அன்று நான் கூறியது உனக்கு ஞாபகம்  இல்லையா என்று கேட்டது. புலியானது தந்திரமாக நீ யாரென்று தெரியவில்லை என்று கூறியது. 

அப்போது மரங்கொத்தி ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக பொய் கூறுகிறாய் என்று கேட்டது.அப்போது புலி நான் காட்டு விலங்கு ஆகையால் நீ எலும்பு எடுக்கும்போதே உன்னை எனக்கு உணவாக்கி கொண்டிருப்பேன் ஆகையால் உன் உயிர் தப்பித்துவிட்டது என்று மகிழ்ச்சி கொள். மரங்கொத்தி மனதிற்குள்ளே நான் எறுமை எடுக்கவில்லை என்றால் அப்படியே இரந்து இருப்பாய். 

இப்போது எலும்பு எடுத்த பின்பு இப்படி கூறுகிறாயா? உனக்கு ஒரு நல்ல பாடம் கற்று தருகிறேன் என்று மனதுக்குள்ளே எண்ணியது. புலி வேட்டையாடும் அவனை நன்றாக உண்டு மரத்தினடியில் உறங்கி இருந்தது.அதிக அளவில் கோபத்திலிருந்த மரங்கொத்தி புலியின் அருகில் சென்று அதன் ஒரு பக்க கண்ணை தன் கூர்மையான மூக்கால் கண்ணை கொத்தி குருடாகி விட்டது. 

தூங்கியிருந்த புலி வலியிலிருந்து ஏன் இப்படி செய்தாய் என்று கோபத்தில் கேட்டது.அப்போது எனக்கு கூர்மையான மூக்கு உள்ளது நான் நினைத்திருந்தால் இரண்டு கண்களையும் குருடாக்கி இருப்பேன்.ஆகையால் ஒரு கண்ணையாவது மீதம் உள்ளது என்று மகிழ்ச்சி கொள் என்று கூறியது போலவே மரங்கொத்தி பதிலடி கொடுத்தது. யாரையும் ஏமாற்றக்கூடாது. அப்படி ஏமாற்றினால் அதற்கு தகுந்த கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.

Post a Comment

0 Comments