நன்றி மறவாத புலி

நன்றி மறவாத புலி  


முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒரு மனிதனும் ஒரு புலியும் இவர்கள் எப்படி நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் காட்டில் புலி தனியாக உரிமை கொண்டு நடந்து செல்லும்போது வழியில் முட்கள் இருப்பதை காணாமல் அதன்மேல் மிதித்து விட்டது. காலில் முட்கள் ஏறி மிகுந்த வழியில் தனியாக கத்திக்கொண்டிருந்தது. வலி அதிக அளவில் இருந்ததால் நீண்ட நேரமாக கத்தியது. அதன் வழியாக மனிதன் ஒருவன் வந்தான். அப்போது தான் என்ன ஏதோ சத்தம் கேட்கிறதே,ஏதோ ஒரு மிருகத்திற்கு பிரச்சினையாக உள்ளது போல என்று சத்தம் கேட்கும் இடத்தில் எட்டிப் பார்த்தான்.

அது ஒரு புலி. அமைதியாக சென்று அந்த முல்லை எடுத்தான். புலி எழுந்து நின்றது. இவருக்கு பயமாகவே இருந்தது. எங்க நம்மை ஏதாவது செய்து விடுமோ என்ற பயம் தான். புலி அருகில் வந்து அவரை மீது பாசமாக முகத்தில் நாக்கால் நக்கி கொடுத்துவிட்டு காட்டிற்குச் சென்று விட்டது. சில நாட்களுக்குப் பின்பு காட்டிலுள்ள மிருகங்களை வேட்டைக்காரர்கள் பிடித்துச் சென்று கூண்டில் அடைத்தனர். அப்போது அந்தப் புலியும் இருந்தது.

வேட்டைக்காரர்களுக்கு யோசனை வந்து புலியுடன் ஒரு மனிதன் சண்டையிட்டால் எவ்வளவு சுவராசியமாக இருக்கும் என்று எண்ணி ஒரு மனிதனை அந்த புலி இருக்கும் கூண்டில் அடைத்தனர். அந்த மனிதன் அதிகாலையில் வயதில் இருந்தான். புலி ஏற்கனவே தன்னை கூண்டில் அடைத்து உள்ளனர்.இப்போது இது வேறயா என்று கோபமாக பாய்ந்த வந்த புலி அந்த மனிதரும் அருகில் வர வர அந்த  மனிதனுக்கு தன்னை உணவாக்கி கொள்ளுமோ என்று அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

வேகமாக வந்த புலி திடீரென்று அவன் முகத்தில் நாக்கால் நக்கியது. ஏனென்றால் காட்டில் இந்த புலிக்கு உதவி செய்தது இந்த மனிதன் தான். இந்த செயல்களை கண்டு அனைவரும் வியந்து பார்த்தனர். பின்பு இருவரையும் விடுதலை செய்து கைதட்டி பாராட்டினர். மகிழ்ச்சியாக அந்த மனிதன் அம்புலியும் சென்றனர்.பின்பு இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.  எந்த ஊரில் நல்ல செயல்கள் செய்தாலும் பரிசு கிடைக்கும்.

Post a Comment

0 Comments