துணிச்சலான எறும்பு

துணிச்சலான எறும்பு  


பெரிய மரத்தடியில் எறும்புகளும் ஒன்றாக சேர்ந்து புற்று கட்டி வாழ்ந்து வந்தது. பல சுற்றுகள் அந்த மரத்தடியில் இருந்தது.அனைத்து இரும்பு கொள்ளும் ஒன்றாக இணைந்து தான் அதற்கு தேவையான உணவுகளை கொண்டு வரும். உணவை ஒன்றாக கொண்டு வருவது போல அனைத்து எறும்புகளும் ஒன்றாகத்தான் தன் கொண்டுவந்த உணவை உண்ணும். இப்படியெல்லாம் அனைத்து எறும்புகளும் உணவுகளை சேர்ப்பதற்கு மும்முரமாக வேலை செய்து வந்தனர்.

அப்போது ஒரு நாள் அடர்ந்த இடியுடன் கூடிய பலத்த மழை.எறும்புகளின் புற்றுக்குள் மழைநீர் உள்ளே வந்தது. நீர் உள்ளே வந்ததால் எறும்புகள் அனைத்தும் அதற்குள் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தன.மழை நீரால் வெளியே இருந்த புற்றுகளின் மீது உள்ள மண் கல் கரைய ஆரம்பித்தது.எங்கு செல்வதென்று தெரியாமல் பெற்றுக் கொள்ள அனைத்து எலும்புகளும் இருந்தனர்.

ஆனால் இரண்டு இரும்புகள் மட்டும் முயற்சி செய்து புற்றின்மீது வெளியே வந்தது.அதில் ஒரு எறும்பு மட்டும் நான் வரவில்லை நண்பா நீ மட்டும் சென்று வா என்று கூறி நான் உள்ளே போகிறேன் என்று அதனிடம் கூறி விட்டு சென்றது. தன் நண்பன் உள்ளே செல்கிறானே! எவ்வளவு கூறியும் கேட்க மாட்டானா என்று வருத்தத்துடன் புற்றிலிருந்து கீழே வந்தது. புற்றை சுற்றிலும் அதிக அளவில் மழை நீர்.

கீழே விழுந்து இறந்து விடுவோம் என்று புற்றின் ஓரமாக சென்று அந்த பெரிய மரத்திற்கு வந்தது. தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மரத்தில் ஏறியது. கீழே விழுந்தது. மீண்டும் ஏறியது. மீண்டும் கீழே விழுந்தது.மூன்றாவது முறையாக மரத்திலேறி கிளைகள் உள்ள இலைகளை பறித்து இலையின்  மீது அமர்ந்து கொண்டு கீழே குதித்தது. மழை நீரில் இலைகளுடன் அந்த இரும்பு மட்டும் மிதந்து கொண்டிருந்தது. மழை நின்ற பின்பு அந்த புற்றின் அருகில் வந்து பார்த்தால் மழை நீரில் கரைந்து போயிருந்தன. அனைத்து எறும்புகளும் வெளியே வருவதற்கு பயம் கொண்டு புற்றிலே தன் உயிரை விட்டது. இதைப் பார்த்த அந்த இரும்பு மழை நீருடன் அதன் கண்ணீரும் கலந்து வருத்தப்பட்டது. பயப்படாமல் தைரியமாக முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகத்தில்,...

Post a Comment

0 Comments