இரண்டு ஆடுகள்

இரண்டு ஆடுகள்  


பசுமையான காட்டின் நடுவே வற்றாத நதி ஒன்று இருந்தது.எந்நேரமும் நீர் வந்து கொண்டிருப்பதால் அந்த நதியை சுற்றிலும் மரங்கள் செடிகள் மற்றும் பூக்கள் அனைத்தும் பசுமையாகவே இருக்கும். ஒரு நாள் ஆடு தண்ணீர் பருகுவதற்காக வந்தபோது பக்கத்தில் புல்களை கண்டு எவ்வளவு செழுமையாக உள்ளது என்று தினமும் அதே இடத்திற்கு வந்து புல்களை மேய்ந்தது. காட்டிற்கு தினமும் வந்து இந்த புல்களை மேய்ந்து விட்டு பக்கத்தில் உள்ள நீரை பருகி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்.

இப்படியே தினமும் செய்து வந்த ஆடுக்கு இந்த புல்கள் உணவு உண்டு சளிப் ஆகிவிட்டது. நீரோடை என்பதால் இக்கதையில் உள்ள பொருட்களை மட்டும் தான் உன்ன முடிந்தது. இந்த ஆட்டின் கண்களுக்கு அக்கரையிலுள்ள பூக்கள் நன்றாகவே இந்த பொருட்களை விட செழுமையாக தெரிந்ததால் அதை உண்ண வேண்டும் என்று பேராசை வந்தது. ஆனால் அக்கரைக்கு எப்படி செல்வது என்று சிறிதும் தெரியவில்லை. அப்போது பக்கத்தில் சுற்றிப் பார்த்தபோது மரமொன்று நீரோடையில் சாய்ந்து காய்ந்து போயிருந்தது. இதன் வழியாக செல்லலாம் என்று வந்தது.

அப்போது இதே போன்று இன்னொரு ஆடை எதிரே நின்று இக்கரைக்கு வருவதற்காக நின்று கொண்டிருந்தது.இரண்டு ஆடுகளும் அந்த காய்ந்த மரத்தில் ஏறி வருவதற்காக முயன்றது. இரண்டு ஆட்டிற்கும் நாம் முன்னே செல்லலாம் என்ற எண்ணம். ஆனால் இருவருமே வழிவிடாமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் யாருமே வழி விடவில்லை.

அப்போது முதலில் செல்லலாம் என்ற ஆட்டிற்கு அதன் தாத்தா ஆடு கூறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.  கரையில் கடக்க முயன்றபோது இரண்டு ஆடுகள் தங்களைப் போலவே வழிவிடாமல் ஆணவத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி நீரோடையில் விழுந்து உயிரை விட்டது என்று அவர் தாத்தா ஒருமுறை அவரிடம் கூறியுள்ளார். அதே போன்று நாமும் செய்யக்கூடாது என்று எண்ணி இருவரும் மரக்கட்டில் நடுவில் வந்தனர்.

முதல் கரையை கடக்க நினைத்து ஆடு மற்றும் ஆடிடும் நான் அமர்ந்துகொள்கிறேன் நீ என்னை தாண்டி செல் என்று கூறி இருவரும் மாற்றிக்கொண்டனர். மற்றொரு ஆடு நன்றி நண்பா நீ இப்படி செய்யவில்லை என்றால் இருவருமே சண்டையிட்டு நீரில் விழுந்து இருப்போம் என்று கூறி இரு ஆடுகளும் கரைகளைக் கடந்து சென்றது. யோசித்து செயல்பட வேண்டும்

Post a Comment

0 Comments