பொய் சொல்லக்கூடாது

பொய் சொல்லக்கூடாது  


அழகிய கிராமத்தில் kolu என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். கோலு தினமும் அவனின் ஆடுகளை ஒரு மலை உச்சியில் மேய்ப்பான். தினமும் ஆடுகளை மலை உச்சிக்கு கொண்டு செல்வது மட்டும் தான் இவன் வேலை அதன் பின்பு ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்து உறங்குவான் இல்லை ஆடுகளை வேடிக்கை பார்ப்பான். இப்படியே தினமும் செய்து வந்ததால் அவனுக்கு சலிப்பாக விட்டது. பொழுதுபோக்கிற்கு எதுவுமே இல்லை என்று வருத்த பட்டான்.

ஒருநாள் மரத்தடியில் யோசித்துக் கொண்டிருந்தான். பொழுதுபோக்கிற்காக என்ன செய்வது என்று அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. கொலு மலை உச்சியில் இருந்து வாடகை வருகிறது என்னை காப்பாற்றுங்கள் என்று அதிக சத்தத்துடன் கட்டினான். மலைக்கு கீழ் பகுதியில் விவசாயம் செய்பவர்களுக்கு சத்தம் கேட்டு மலை உச்சிக்கு கோலுவை காப்பாற்றுவதற்காக தலைதெறிக்க ஓடி வந்தனர்.

ஆட்கள் எங்கே ஓநாய் என்று கொலு வை பார்த்து கேட்டபோது மரத்தில் அமர்ந்துகொண்டு சிரித்தான்.இவன் சிரித்ததை கண்டு இனிமேல் இதேபோன்று தவறை செய்யாமல் இரு என்று கூறிவிட்டு விவசாயம் செய்ய சென்றனர். பின்பு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஓநாய் வருகிறது என்று அதேபோன்று கத்தினான். வேகவேகமாக விவசாயம் செய்தவர்கள் மலைமீது வேர்வை சிந்த ஓடிவந்தனர்.மீண்டும் ஓநாய் எங்கே என்று கையில் கொம்பு வைத்துக் கொண்டு கேட்டனர்.

Kolu மீண்டும் குறும்புத்தனமாக சிரித்தான். இவன் சிரிப்பதைக் கண்டு அதிக அளவில் கோபமடைந்து இனிமேல் நீ கத்தினாலும் வரமாட்டோம் என்று கூறி  விவசாயம் செய்வதற்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து ஓநாய் உண்மையாகவே வந்தது. கோலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.கிளைகளில் அமர்ந்து கொண்டு ஐயோ என்னை காப்பாற்றுங்கள் என்று அதிக அளவில் கத்தி கூப்பிட்டான். ஒருவரும் வரவில்லை.

மீண்டும் இவன் ஏமாற்று வான் என்று விவசாயம் செய்பவர்கள் வரவில்லை. ஓநாய் வந்து அனைத்து ஆடுகளையும் அதற்கு உணவாக்கிக்கொண்டது.ஓநாய் செய்வது எல்லாம் மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றான்.  அன்று அவன் ஒன்று நன்றாக புரிந்து கொண்டான்.எப்போதுமே எச்சூழலிலும் பொய் சொல்லவே கூடாது என்று நல்ல பாடம் கற்றுக் கொண்டான்.

Post a Comment

0 Comments