சோம்பேறி விவசாயி

சோம்பேறி விவசாயி  


ஒரு கிராமத்தில் ராஜா என்ற விவசாயி ஒருவன் தன் மனைவி கலாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் சோம்பேறியாக இருந்தால். கலாவிடம் வயல்வெளிக்கு சென்று வேலை செய்வது போல மனைவியிடம் கூறி வயல்வெளியில் உள்ள மரத்தடியில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பான். கலா தன் கணவன் வயல்வெளியில் உழைத்து விட்டு வருவார் அவருக்கு நன்றாக உணவு செய்ய வேண்டுமென்று தினமும் நல்ல உணவை செய்துவைப்பார்.

ஆனால் ராஜா தினமும் உறங்கிக் கொண்டிருப்பான் சிறிதும் வேலையை செய்வது கிடையாது. வீட்டில் இருந்த தானியங்கள் எல்லாம் சிறிது சிறிதாக காலியாகிவிட்டது.தன் கணவன் என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்று மறுநாள் காலையில் அவருக்கு முன்னாடியே தயாராகி இருந்தால் கலா.ராஜா வாருங்கள் செல்லலாம் என்று அழைத்துச் சென்று வயல்வெளியை பார்த்தால் ஒன்றுமே இல்லாத காலியாக இருந்தது. கோபமடைந்தாள் கலா.

மண்வெட்டியை கையில் கொடுத்து வேலையை பாருங்கள் என்று கூறினாள். ராஜா வல்லம் தோன்றுவது கலா விதை விதைப்பது என்று இருவரும் நன்றாக உழைத்தனர். இவர்களின் வயல் வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவருக்கு நன்றாக உபசரித்தனர். இவர்களின் உபசரிப்பை கண்டு உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்று முனிவர் கூறினார். ராஜா வயல்வெளியில் வேலை செய்வது கஷ்டப்பட்டு எங்களுக்கு பணிவிடை செய்ய ஆள் ஒருவன் தேவை என்று கேட்டான். கலா  அமைதியாகவே இருந்தாள்.

 சிறிதளவில் தன் கணவன் மீது கோபம் அடைந்து கொண்டிருந்தாள். முனிவரும் அவர்கள் கேட்ட படியாகவே பணிவிடை செய்ய ஒரு அரக்கனை கொடுத்தார். இவனுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்கணும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று நீங்களே பாருங்கள் என்று கூறி விட்டு வருகிறேன் என்று சென்று விட்டார். அரக்கன் வேலை கொடுங்கள் இல்லை என்றால் உங்களை தின்று விடுவேன் என்று கூறினார். அரக்கன் கூறுவதைக் கேட்ட ராஜாவும் கலாவும் வந்தனர்.

ராஜா போய் அந்த நிலத்தை உழுது வா என்று கூறினான். சிறிது நேரத்திலேயே அந்த நிலத்தை உழுது விட்டான் அரக்கன்.என்ன இவன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட்டால் என்னை தின்று விடுவான் போல இருக்கு என்று பயந்து பக்கத்தில் இருந்த கிணறு அது நன்றாக தோன்றவில்லை போய் அதை நன்றாக தோன்றிவிடுவார் என்று ராஜா கூறினான். இந்த அரக்கன் கூறிய வேலையை எல்லாம் சிறிதளவில் எளிமையாக முடித்து விடுகிறான். என்னை திண்டு விடுவான் போல ராஜா பயந்தான்.

கலாவுக்கு தன் கணவனின் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அந்த நேரத்தில் ஒரு யோசனை தோன்றியது. அரக்கன் வருவதற்கு முன்பே யோசித்துக்கொண்டிருந்தாள். அரக்கன் வந்தவுடன் ஊருக்கு வெளியே நாய் உள்ளது அதன் வாலை நேராக நிறுத்தி விட்டு வீட்டுக்கு வா என்று கூறினார். அரக்கோணம் நாய் வாலை நினைத்துக்கொண்டிருந்தான். இறுதிவரையிலும் நிறுத்தவே முடியவில்லை.பின்பு ராஜா தன் சோம்பேறித்தனத்தை உணர்ந்து உண்மையாக உழைக்க ஆரம்பித்தான்.

Post a Comment

0 Comments